Tuesday, May 03, 2005

யாஹூ யாஹூ ஹா...ஹா 1 ஜி.பி

ஜீமெயில் எப்ப ஜி.பி அளவில் மின்னஞ்சல் சேவையை அளித்ததோ அப்போதே மற்ற இலவச மின்னஞ்சல் வளங்கும் நிறுவனங்களுக்கும் குளிர்காய்ச்சல் அடிக்க ஆரம்பித்து விட்டது. ஜீமெயில் தற்சமயம் 2 ஜி.பி சேமிப்பு வசதி அளிக்கிறது இலவசமாக. இது பெரும்பாலானோர் அறிந்ததே. மிக அதிகமான வாடிக்கையாளர்களை வைத்துள்ள யாஹீ நிறுவனமும் முதலில் எந்த விதத்திலும் அலட்டிக் கொள்ளாமல், ஏதோ கொஞ்சம் 6 MB யில் இருந்து பல மடங்கு உயர்த்தியது. அதே நேரத்தில் ஹாட் மெயிலும் தனது 2 MB யில் இருந்து அதிகரித்து. ஆனால் ஜி.பி அளவில் அல்ல. சிறிது சிறிதாக யாஹீ தனது மின்னஞ்சல் சேமிப்பு வசதியை அதிகரித்துக் கொண்டே வந்தது. தற்போது அதிகபட்சமாக 1 ஜி.பி என இலவச மின்னஞ்சல் சேமிப்பு அளவை உயர்த்தி உள்ளது. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது (இல்லை கொடுத்தது)முதலில் ஜீமெயில் தான். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் தானே. வாடிக்கையாளர்களுக்கு இலவசமாய் பெரிய சேவை. இதில் ஏற்கனவே பலர் அதிக சேமிப்பளவு வேண்டுமென ஜீமெயில், ரீடிஃப் என மாறினார்கள். பலர் தன்னுடைய சகல பரிவர்த்தனைகளையும் அப்புதிய முகவரிக்கே மாற்றிக் கொண்டார்கள். ஆனால் சிலர் (வருங்காலம் அறிந்தவர்கள்)எப்போதும் போல தனது பழைய யாஹீ மின்னஞ்சல் முகவரிக்கே முக்கியத்துவம் கொடுத்தார்கள்.
ஜீமெயிலில் இருக்கும், யாஹீவில் இல்லாத வசதிகள் என வெகு குறைவாகவே உள்ளன. அதாவது, வருகிற மின்னஞ்சலை மற்ற முகவரிக்கு மாற்றி விடுவது, pop3 வசதி, எளிய தேடும் வசதி என்பன போன்றவை. ஆனால் யாஹீவில் கணக்கு வைத்திருந்தால், பலவும் ஒரே முகவரியோடு செய்வது சாத்தியம். ம்..ம்..Messenger (தூதுவர்), குழுமம், என்பன அடக்கம்.
ஆக மொத்தத்தில் எல்லாக் கோப்புகளையும் இணையத்தில் இறக்கி வைத்துவிட்டு, இளைப்பாறிக் கொள்ளலாம் இனி...

2 comments:

')) said...

போஸ்கோ,
நானும் சமீபத்தில்தான் கவனித்தேன். யாஹூ 1 GB ஆகியிருக்கிறது.

')) said...

Hi Nice blog please take look at my website as well *My free sms website**