அறிவியலும் தமிழகமும்
2020 என்ற கனவை முன்வைத்து இந்தியா பயணித்துக் கொண்டு இருக்கிறது. அதற்கு ஏதுவாக பன்முனைத் திட்டங்கள் செயலாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக அறிவியலில் முன்னேற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஏட்டளவில் இல்லாமல் நிறைவேற்றப்பட வேண்டியவை என உள்ளதாகத் தெரிகிறது. இதற்காக பல பன்னாட்டுத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என நடுவண் அரசு உத்தேசித்துள்ளது. கணினி மென்பொருள், தொழிற்சாலைகள் என முன்னேறினாலும் அடிப்படை அறிவியலில் வளர்ச்சி காணாது இமாலய சாதனைகளை எட்ட இயலாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. அவ்வாறு உருவாக்கப்பட இருக்கின்ற ஆராய்ச்சி நிறுவனங்கள் தமிழகத்திற்கு வர இருந்த வாய்ப்புகள் ஏற்கனவே கைகழுவிப் போய்விட்டதாக வா. செ. குழந்தைசாமி அவர்கள் தினமணி நாளிதழில் தலையங்கக் கட்டுரை ஒன்று சமீபத்தில் எழுதி உள்ளார். அதில் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் பலவற்றை தமிழகத்தில் உள்ள அறிவியலார்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும். தேசியம் எனப்பார்க்கும் போது இந்தியாவின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தை பார்த்து ஆனந்தப்பட்டாலும், வளர்ச்சி என்று வரும் போது அது சமச்சீராக இருக்கும் போதுதான் பலன் மிகைப்படும். ஆட்சியாளர்களாக இருப்பினும், கல்வித்துறையில் பொறுப்புள்ள பதவிகளில் இருப்பவர்களாக இருப்பினும், அரசியல்வாதிகளாக இருப்பினும் கல்வி என்று வரும்போது பொது நலன் மற்றும் வருங்கால வளம் எண்ணிச் செயல்பட்டால் தமிழகமும் தென்னகத்தில் அறிவியலில் கணிசமான வளர்ச்சி காண ஏதுவாகும்.
மேலதிகத் தகவலுக்கு தினமணி நாளிதழ்

2 comments:
Bosco,
who are the people in the photo :) ?,
அவங்க நம்ம ஊருக்காரங்க தான். ஆனா புகைப்படம் எடுத்த இடம் தான் வேற!!!
Post a Comment