Friday, April 14, 2006

வயசு இரண்டாச்சு

அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ்ப் புத்தாண்டின் எனது இவ்வலைப்பூ மூன்றாம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. நண்பர் முத்து தொடர்ந்து தந்த ஊக்கத்தால் தமிழில் இரண்டு வருடத்திற்கு முன்பு யுனிகோடில் எழுதக் கற்றுக் கொண்டு, அதிகம் இல்லையெனினும் சில எழுதியுள்ளேன். பழைய பதிவுகளைத் திரும்பிப் பார்க்கும் போது மகிழ்வாய் இருக்கிறது. இனிவரும் காலங்களில் மிக பல பயனுள்ள ஆக்கங்களை அனைவரும் எதிர்பார்க்கலாம்.

இந்த இனிய நாளில் சிஃபி தமிழ் இணைய இதழ் ஆசிரியர் அண்ணாகண்ணன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, நான் எழுதிய 'ஜெர்மனியில் தமிழ்' என்ற கட்டுரை சிஃபி இணையதளத்தில் வெளி வந்துள்ளது. தமிழ் புத்தாண்டிற்காக சிஃபி இணையதளம் வெளியிட்டுள்ள சிறப்பு கட்டுரைகள் 'நாடுகள்தோறும் தமிழ்' என்ற கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளன. முனைவர் திரு. நா. கண்ணன், திருமதி. துளசி கோபால் உள்பட பல தமிழ் அறிஞர்கள் எழுதிய கட்டுரைகளும், உரையாடல்களும் அங்கு இடம் பெற்றுள்ளன. எனது நேர்முக உரையாடல் ஒன்றும் அங்கு இடம் பெற்றுள்ளது. ஜெர்மனியில் புலம் பெயர்ந்து இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருகின்ற திரு. வேலாயுதம் அவர்களிடம் நான் தொலைபேசி வாயிலாக நடத்திய உரையாடலும் ஒலிப்பெட்டகமாக வெளியிடப்பட்டுள்ளது. நான் எழுதிய கட்டுரையும், எனது உரையாடல் நிகழ்ச்சியும் எனது கன்னி (முதல்) முயற்சியாகையால் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது அங்கு சென்று படித்து, கேட்டு உங்களது அனுபவத்தை தெரிவித்தால் இது போன்று நல்ல நிகழ்ச்சிகளை அளிப்பதற்கு மிக்க உறுதுணையாக இருக்கும்.

0 comments: