வாளை மீனுக்கும்...
சித்திரம் பேசுதடி படத்தில் வருகின்ற வாளை மீனுக்கும்... என்ற பாடல் இவர்களது திருமணத்திற்காக மறு ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. புகைப்ப்டத்திற்கு கீழ் பாடல் வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுவரை வாலை மீனுக்கும் ... பாடலைக் கேட்காதவர்கள் ஒருமுறைக் கேட்டுவிட்டு பின் கீழ்க்கண்ட பாடலைப் படிக்க ஆரம்பியுங்கள். அல்லது அப்பாடலை ஓடவிட்டுக் கொண்டே இப்பாடலை படியுங்கள். ;-)

சூப ரோ..சூப ரோ ..சூப ரோ
ச்சூ ச்சூ...ச்சூ ச்சூ...
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டமெல்லாம் ஊர்கோலம்,
அந்த பார்லிமெண்ட்ல நடக்குதய்யா திருமணம்
அங்கு 2 கட்சி தொண்டர்களும் கும்மாளம்
ஓ...ஓ...ஓ..ஓ
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
ச்சூ ச்சூ...சூப ரோ
ஊர்வலத்தில் ஆடிவரும் கரகாட்ட நாட்டியம்
ஐயா மேளதாள முழங்கி வர பிரச்சார வாய்ச்சாளம்
பாமரரை ஏமாத்துராரு பார்த்தியோ
நம்ம பாமரரை ஏமாத்துராரு பார்த்தியோ
அங்கு தேர் போல போகுதய்யா தேர்தல்கோல காட்சியோ
தேர்தல்கோல காட்சியோ..
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
நாத்த அரசியல் சேரும் வந்த இடத்தில் லவுங்கோ
இதை பார்த்தவிட்ட பொதுசனங்க வச்சிதய்யா வத்திங்கோ
நாத்த அரசியல் சேரும் வந்த இடத்தில் லவுங்கோ
இதை பார்த்தவிட்ட பொதுசனங்க வச்சிதய்யா வத்திங்கோ
பஞ்சாயத்து தலைவரான நரேஷ் குப்தா தானுங்கோ
பஞ்சாயத்து தலைவரான நரேஷ் குப்தா தானுங்கோ
அவர் சொன்னபடி இருவருக்கும் நிச்சயதார்த்தம் தானுங்கோ
கல்யாணம் நடந்து வருது பாருங்கோ ஐயா
தேர்தல் நடந்து வருது பாருங்கோ
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டமெல்லாம் ஊர்கோலம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரசு தானுங்கோ
அந்த வாக்குறுதி, வாய்ப்பேச்சு ஏராளமா இருக்குது
மாப்பிள்ளை சொந்த பந்தம் காங்கிரசு தானுங்கோ
அந்த வாக்குறுதி, வாய்ப்பேச்சு ஏராளமா இருக்குது
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு ஐய்யா
பெண்ணுக்கு சொந்த பந்தம் வைகோ பேச்சு ஐய்யா
அந்த ராமதாசும், திருமாவும், வரவழைப்ப தருகுது...
வரவழைப்ப தருகுது..
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் கல்யாணம்
அந்த ஜாதி கட்சி கூட்டமெல்லாம் ஊர்கோலம்,
மாப்பிள்ளை கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ
மாப்பிள்ளை கருணாநிதி கோபாலபுரம் தானுங்கோ
அந்த மணப்பொண்ணும் ஜெயலலிதா போயஸ் கார்டன் தானுங்கோ
இந்த திருமணத்த நடத்தி வைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ
இந்த திருமணத்த நடத்தி வைக்கும் சோனியாகாந்தி அக்காங்கோ
இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ
..
..
..
..
..
தலைவரு விஜயகாந்த் தானுங்கோ

4 comments:
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!
"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்" என்னும் பழமொழிக்கேற்ப,
"யானை தன் தலையிலேயே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும்" என்னும் முதுமொழிக்கேற்ப,
"உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்" என்று, பொறாமையில் வளர்ந்தவர்கள் கடைசியில் அழுவது போல,
இரு கழகங்களும், 'இந்தமுறை எப்போதும் போல நமக்கு நாம்தான் போட்டி; நம் பங்கீட்டுக்குள் அடுத்தவனுக்கு கொஞ்சம் காட்டி விட்டு, நாமே சுருட்டிக்கொள்வோம்', என நினைத்த கணக்கெல்லாம் பொய்யாக,
நினைத்தபடி 'அலை' ஒன்றும் வீசாத நிலை கண்டு,
மனம் புழுங்கி,
உளம் வெதும்பி,
என்ன செய்வது என அறியாமல்,
ஏனிப்படி ஆயிற்று?
யார் காரணம்?என
தலையைச் சொறிந்து கொண்டும்,
விடை ஒன்றும் கிடைக்காமல்,
திகைத்து நிற்கின்ற நேரத்தில்,
தேர்தலுக்குப் பத்து நாட்கள் மட்டுமே உள்ள இந்த நேரத்தில்,
என்ன செய்யலாம்,
யாரைத் திட்டலாம் என்று புரியாது,
அரண்டு போயிருக்கும் நிலையில்,
இவனைத் திட்டுவதாக நினைத்து,
யாரையோ உசுப்பி விட்டோமே!
தேர்தல் நெருங்கும் போது தென்னாட்டில்
"சிங்கத்தையும், சிறுத்தையையும்" தூண்டி விட்டுவிட்டோமே என்று,
இல்லாத முடியைப் பிய்த்துக் கொண்டிருக்கும்
கலைஞர் ஒரு புறம்,
பெண்ணென்பதை மறந்து பேயாட்டம் போட்டோமே,
நல்லோரையும், எளியோரையும் உள்ளே வைத்தோமே,
வல்லாரையும், எல்லாரையும் காலில் விழ வைத்தோமே,
அந்தப் பாவங்கள் எல்லாம் இப்போது வந்து சூழ்ந்து ,
"சிலம்பில்" சொன்ன படி,
'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்'என்னும்
உன்னத வாக்கியம் உண்மையாக
உரு முன்னே தோன்றுவதைப் பார்த்து,
தலைவியும், தோழியும் மயங்க,
கறுப்புச்சிங்கம் 'விஜய'நடை போட்டு வர,
தென்னகத்தில் 'தேவர்மகன்' துள்ளி எழுந்து வர,
தென்கோடியில் சத்தமின்றி,
முல்லைப்பெரியார் மக்களெல்லாம்
மனமுவந்து கூடிவர,
தமிழகத்தில்,
தலைவிரித்து,
முப்பதாண்டுக் காலம் மோசடி செய்த
கழகங்களின் ஆட்சிக்காலம்
முடிவுக்கு வருகுதென,
'விஜய'மெனக் 'காந்தம்'ஒன்று வேகமாகப் பரவுகின்ற
'முரசு'க்கே ஓட்டென்று கொட்டு முரசே!
வீணர் ஆட்டம் ஓய்ந்ததென்று கொட்டு முரசே!
வெற்றி எட்டுத் திக்கும் எட்ட கொட்டு 'முரசே' !!
""வினைக்குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரியனாகச் செயல்." [குறள் 518]
[ஒருவன் ஒரு செயலுக்குத் தகுதியுடையவனாதலை ஆராய்ந்து துணிந்த பின்னர், அவனை அச்செயல் செய்தற்கு உரியவனாக அச்செயலில் அமர்த்துதல் வேண்டும்.]
www.aaththigam.blogspot.com
போஸ்கோ,
இப்பக்குள்ள ஊருக்குப் போகும் உத்தேசமில்லையோ அதான் இந்த தைரியம். ஜெர்மனியில இருந்து நேரா ஆஸ்திரேலியாவுக்கு போயிருவியோ ? :-)).
padam superu. unga ammavum thaathaavum super.
ippoo MGR irunthirunthirunthaal ithu nijamaana onnuthan. i think there is no big difference between MGR and MK in age. So it will be like this only.
Post a Comment