விட்ஜட் தெரியுமா உங்களுக்கு?
கணினித் திரையில் சில கணினி பயன்பாடுகளுக்கான தொடுப்புகளையோ அல்லது தற்சமயம் பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற கோப்புகளை மட்டுமே வைத்திருப்பதை வழக்கப்படுத்தி இருப்போம். சில நேரங்களில் நமது விருப்பத்திற்கேற்ப நமக்கு பிடித்த இயற்கை காட்சிகளையோ, பிடித்தவர்களின் புகைப்படங்களையோ திரையில் வைப்போம். ஆனால் சும்மா இருக்கின்ற கணினி திரையை பயன்பாடு மிக்கதாக ஆக்கினால் எவ்வாறு இருக்கும். எப்படி வீட்டுச் சுவரில் புகைப்படம் மாட்டியும், கடிகாரம் மற்றும் நாட்காட்டி தொங்க விட்டும் வைத்திருப்போமோ அவ்வாறு கணினித் திரையில் இருந்தால் வேலை செய்வதற்கும் தேவையான அடிப்படை அல்லது அடிக்கடி தேவைப்படுகின்ற தகவல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் அல்லவா?
அதற்காகவே ஒரு மென்பொருள் கிடைக்கிறது. அதுவும் இலவசாமா...அதனை வழங்குவது யாஹூ ஆகும். அதன் பெயர் 'விட்ஜட்' (Widget). இதற்கான மென்பொருளை பெற இங்கு செல்லவும். http://widgets.yahoo.com/ இந்த மென்பொருள் பல சிறிய பயன்பாடுகளை இயக்கவல்லது. உதாரணமாக உங்களுக்கு கடிகாரம் (அதுவும் விருப்பப்பட்ட விதத்தில்)வேண்டும் என விரும்பினால், அதற்கான சிறு தொடுப்புகள் கேலரியில் கிடைக்கின்றன. http://widgets.yahoo.com/gallery/ இந்த கேலரியில் சென்று உங்களுக்கு என்னென்ன பயன்பாடு தேவைப்படுகிறது என்பதற்கு ஏற்ப சிறு பயன்பாடு மென்பொருளை தரவிறக்கம் செய்து கொண்டால் உங்கள் கணினித்திரை பயன்பாடு மிக்கதாகவும், அழககாகவும் இருக்கும். உதாரணத்திற்கு எனது கணினித்திரையின் புகைப்படத்தைப் பாருங்களேன்.!


2 comments:
கணினி இயங்கும் வேகம் பாதிக்கப்படாதா?
எனக்கு தெரிந்து கணினி வேகம் பாதிக்கவில்லை.
Post a Comment