Monday, July 31, 2006

பிளாக்குகள் தடை பற்றி தினமலர்...

ஏற்கனவே இந்திய நடுவண் அரசால் பிளாக்குகள் மீதான தடை குறித்து நமது வலைப்பதிவர்கள் பல கருத்துக்களை கூறி வந்துள்ளனர். இருப்பினும் எந்தவொரு நிகழ்வும் மக்களிடம் நேரடியாக அதுவும் குறிப்பாக இந்தியாவில் செல்ல வேண்டுமென்றால் தேவை தொலைக்காட்சி, நாளிதழ்கள் அடுத்து தான் இணையம். அந்த வரிசையில் பிளாக்குகள் குறித்தான தடை குறித்து தினமலர் தனது இணைய இ-நாளிதழில் (e-paper) படித்த செய்தியை உங்கள் கவனத்திற்கு வைக்கின்றேன். இதில் நம்ம வலைப்பதிவர்கள் கருத்துக்களும் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டு பெட்டிச் செய்தியாக அவர்களது மிகப் பெரிய கட்டுரையில் இணைத்துள்ளார்கள். இதில் வலைப்பூவிற்கு ஒரு நல்ல அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்மணத்தின் பங்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அட நம்ம தருமி பெயர் கூட பார்த்தேங்க.. அவரோட உண்மையான பெயர் அங்கு உள்ளது.

சில திரைப்படங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், அப்படத்திற்கு நல்ல விளம்பரமாய் அமைவது போல், பிளாக்குகளின் மீதான தற்காலிகத் தடை அதற்கு ஒரு விளம்பரத்தை கொடுத்ததாகவே பார்க்கிறேன். இதோ அந்தச் செய்தி, புகைப்பட வடிவில்..(நன்றி: தினமலர்)

1 comments:

Anonymous said...

//Unicode tamil font is needed to view this page//

Is it so? Where can I get that font?!