Tuesday, January 02, 2007

சிட்னி புத்தாண்டு கொண்டாட்டம் 2007

வலைப்பூ நண்பர்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த புத்தாண்டை வரவேற்க சிட்னியில் இருக்கக் கூடிய வாய்ப்பு கிட்டியது. அப்போது துறைமுக பாலத்தில் (Harbour Bridge)2007 பிறக்கும் போது வாண வேடிக்கை அமர்க்களமாக நிகழ்த்தப்பட்டது. பாலம் கட்டி 75 ஆண்டு ஆவதால் இந்தாண்டு சிறப்பாக அனைத்து வாண வேடிக்கைகளும் நிகழ்த்தப்பட்டது. துறைமுக பாலத்திற்கு இருபுறத்திலும் வாண வேடிக்கை நிகழ்த்தப்பட்டது. இது இருபுறமும் ஒத்தமாதிரி இருக்குமாறு நிகழ்த்தப்பட்டது. ஓப்ரா ஹவுஸ் நடுவில் இருக்க, வாணவேடிக்கைகள் இருபுறமும் நடத்தப்பட, உயர்ந்த கட்டங்களின் மின்னொளியில் பார்ப்பதற்கே மெய்சிலிர்க்க வைத்தது. hanger வடிவம் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வடிவமைக்க இந்த hanger தான் பாலம் வடிவமைத்தவரின் மனதில் தோன்றியதாம். நடுவில் 75 வருட நிறைவை நினைவு கூறும் விதமாய் வைரம் (வடிவம்)அமைக்கப்பட்டுள்ளது. நான் எடுத்த சில புகைப்படங்களை வலைப்பூ நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன்.

3 comments:

')) said...

நாம் வாழும் தேசத்தில் வந்திருக்கும் உங்களை வரவேற்கின்றேன்

')) said...

நன்றி பிரபா, நேற்று சிட்னி முருகன் கோயிலுக்கும் சென்றிருந்தேன்.

')) said...

வணக்கம் ஜோன், முருகன் என்ன சொன்னார்? சிவா+விஸ்னு ஆலயத்திற்கும் முடிந்தால் போய்பாருங்கள் :)இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்