Saturday, February 17, 2007

தொலைக்காட்சி ஆர்வலர்களுக்கு....2


வெளிநாட்டில் இருக்கும் போது பொழுது போக்கு முக்கியமானது. பெரும்பாலும் தமிழ் சார்ந்த நிகழ்வுகளாக இருந்தால் மனம் மேலும் ஒன்றிப்போகும் . அதில் முக்கியப்பங்கு தொலைக்காட்சிகளுக்கு உண்டு. ஜெர்மனியில் பல நேரங்களில் பெரும்பாலும் வார இறுதியில் ஏதாவது சினிமா பார்க்கலாம் என நினைத்தால் அதற்கு தேடி தரவிறக்கம் (download) செய்து பார்ப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். சரி ஏதாவது பணம் செலுத்தி இணையதளத்தில் பார்க்கலாம் என்றாலோ அல்லது தொலைக்காட்சியை வீட்டிலேயே பார்க்கலாம் என்றாலோ வீண் விரயம் தான். வார நாட்களில் மருந்துக்கூட ஏதும் நிகழ்ச்சி பார்க்கவியலாது. வீட்டுல வீட்டுக்காரி இருந்தால் அவங்க பார்க்க ஏதாவது செய்யலாம். பிரம்மச்சாரிகளுக்கு (bachelors) அந்த கவலையும் இல்லை. அதனால இலவசமாய் ஒன்னு கிடைச்சால் நல்லா இருக்குமே என நண்பர்களிடம் விசாரித்ததில் சில தமிழ் தொலைக்காட்சிகளை இணையத்தில் இலவசமாய் பார்க்க தொடுப்பு கொடுத்தார்கள். அதை உங்களோடு பகிர்ந்து கொள்ளத்தான் இந்த ஜாலி பதிவு...

சன் டி.வி பார்க்க இங்கு செல்லுங்கள். அவர்கள் சொல்லுகின்ற வழிமுறையை பின்பற்றவும். http://techsatishtv.blogspot.com/2007/01/suntv.html

மேலும் பல அதே தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக Tamilone, தமிழன், ராஜ், ராஜ் டிஜிட்டல் பிளஸ், lol TV போன்றவை நான் சோதித்து பார்த்ததில் நன்றாக வேலை செய்கிறது. மேலும் விபரங்களுக்கு http://techsatishtv.blogspot.com

இது தவிர, மேலும் பல தொலைக்காட்சி சேனல்கள் இங்கும் பார்க்கலாம். http://idesitv.com/db/index.php இத்தளத்திற்குள் செல்ல நீங்கள் பதிவு செய்ய வேண்டும். அதற்கு பின் நன்றாகவே அனைத்து சேனல்களையும் பார்க்கலாம். அதில் பார்க்க கிடைக்கும் சேனல்கள் இவையே! சோனி டி.வி, ஸ்டார் பிளஸ், ஜீ டி.வி, டி.டி நியூஸ், F TV, இன்னும் பல...

பார்த்து ரசியுங்கள்..ஏற்கனவே இது மாதிரி ஒரு பதிவு முன்னமே இட்டது ஞாபகத்திற்கு வருகிறது. தொலைக்காட்சி ஆர்வலர்களுக்கு...

5 comments:

')) said...

என்ன ஜான்.இந்த பக்கமே ரொம்ப நாட்கள் காணவில்லை?
சுட்டிகள் கொடுத்ததற்கு நன்றி.
அப்படியே கிரிக்கெட் டாரன்ட் கிடைக்கும் இடம் தெரிந்தால் சொல்லவும்.
நான் தேடியவரையில் கிடைக்கும் அவ்வளவும் தரவிரக்கம் செய்ய 3~10 நாட்கள் ஆகிறது.

')) said...

நன்றி வடுவூர் குமார்.
//அப்படியே கிரிக்கெட் டாரன்ட் கிடைக்கும் இடம் தெரிந்தால் சொல்லவும்.//
நண்பர்களிடம் விசாரித்துப் பார்க்கிறேன்.

')) said...

நன்றி.
தமிழ் பார்க்க முடியாமல் கஷ்டமாக இருந்தது.
நீங்கள் சொன்ன சைட்டில் போய் பார்க்கிறேன்.
நன்றி ஜான்.

')) said...

வல்லிசிம்ஹன் தங்கள் வருகைக்கு நன்றி . முதன் முதலாய் எனது வலைப்பூவிற்கு வந்திருக்கிறீர்கள் இல்லையா!

')) said...

//அப்படியே கிரிக்கெட் டாரன்ட் கிடைக்கும் இடம் தெரிந்தால் சொல்லவும்.//
http://www.sooriyanfm.net/wc2007/sooriyan.html

www.vaanamtv.com

இந்த இணைப்புகளில் கிரிக்கெட் பார்க்க முடியுமென நினைக்கிறேன்