எட்டிப் பார்க்கும் நிலவு

பெளர்ணமி நிலவு
வெளிச்சம் படர்ந்திருக்கும் வீதிகள்
வேலை செய்ய அலுவலகத்தில் நான்
முதல் மாடியில்..
கண்ணாடி சுவர் வழியே
நிலவின் கொள்ளை அழகு.
இரசிக்க வேண்டுமென ஆசை..!
அலுவலக மின்னொளியில்
வானவீதியின் அழகு கம்மியாய்..
மனம் ஒப்பவில்லை..
திரைச்சீலை போடனும்
தனிமையில் வேலை தொடர..
ஆயிற்று..
குளிர்ந்த நிலா முழுசும்
மறைஞ்சே போச்சு..
வேலையின் நடுவில்
கண் ஒரமாய் நிலவு...
திரும்பிப் பார்த்தால்
கண்ணாடிச் சுவரின் மூலையில்
திரைச்சீலையின் இடைவெளியில்
புன்னகைக்கும் நிலவு..
அட நிலவே
வேலையின் நடுவே
காதலியை ஞாபகப்படுத்தி விட்டாய்!


0 comments:
Post a Comment