Wednesday, March 28, 2007

ஒரு ரூபாயில் இந்தியாவுக்கு பேச...

ஒரு ரூபாயில் இந்தியாவுக்கு பேச இருந்த ஆசை இப்ப நனவாகிறது.

http://www.justvoip.com/en/index.html

மேற்கண்ட இணையதளத்தில் இது பற்றி அறியலாம். VOIP முறையில் இணையத்திலிருந்து சாதாரண தொலைபேசிக்கோ, செல்பேசிக்கோ பேசிக் கொள்ளலாம். ஒரு நிமிடத்திற்கு இரண்டு யூரோ செண்ட் ஆகிறது. இணையம் மூலம் பேச வேண்டாம், எனது வீட்டு தொலைபேசியில் இருந்து இந்தியாவில் உள்ள வீட்டு தொலைபேசிக்கு பேச வேண்டும் என அடம் பிடிப்பவர்களுக்கு Direct call வசதி உள்ளது. இதில் உங்களது அலுவலக அல்லது வீட்டு சாதாரண தொலைபேசி எண்ணை கொடுத்து விட்டு, வீட்டு தொலைபேசி இலக்கங்களை அழுத்தினால், முதலில் உங்களது தொலைபேசிக்கு அழைப்பு வரும். ரீசிவரை எடுத்தவுடன் முறுமுனையில் (உ.ம் இந்தியா) உள்ள தொலைபேசியில் மணி அடிக்கும். பிறகு என்ன அடுத்த முனையில் உள்ளவர் பேச ஆரம்பித்தவுடன், நீங்க உரையாடலாம். இந்த முறையில் பேச கணினி ஒரு இணைப்பு அலுவலமாக உள்ளது.

விலைப்பட்டியல் பார்க்க...

http://www.justvoip.com/en/rates.html

4 comments:

')) said...

http://www.voipcheap.com/en/index.html
இதையும் ஒருக்கா பாருங்கோ.

')) said...

சிங்கை - இந்தியா,அவ்வளவு சீப்பாக இல்லை.
ஒரு வேளை சிலருக்கு உதவியாக இருக்கும்.

')) said...

//சிங்கை - இந்தியா,அவ்வளவு சீப்பாக இல்லை.//
என்ன குமார் சிங்கைக்கு இலவசமா பேசலாமே! free இன்னு தானே இருக்கு!

')) said...

நாளாயினி, நன்றி
//இதையும் ஒருக்கா பாருங்கோ. // அதுல விலை அதிகம். voipbuster, voipstunt, voipcheap, lowratevoip இது எல்லாம் பயன்படுத்தி இப்ப justvoip ல இருக்கோம்..