Saturday, July 07, 2007

இணைய தள அறிமுகம் [கழுகுமலை.com]

கழுகுமலை குறித்தான மூன்று பதிவுகளை ஏற்கனவே இங்கு எழுதியிருக்கின்றேன். நண்பர்களின் அரும் முயற்சியாலும் எனது சிறிய பங்களிப்பாலும் இப்போது இணையத்தில் கழுகுமலைக்கு என ஒரு வலைப்பக்கம் தயாராகியுள்ளது. இதில் கழுகுமலையின் பெரும்பாலான விபரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இன்னும் கணினி வல்லுநர் குழு பல மாற்றங்கள் செய்ய உள்ளது. இருப்பினும் உங்கள் பார்வைக்கு வலைப்பக்கத்தினை அறிமுகம் செய்கின்றேன். உங்களது மேலான ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது. தற்சமயம் முகப்புப் பக்கம் ஆங்கிலத்திலும் ஏனைய அனைத்து விபரங்களும் தமிழில் கொடுக்கப்பட்டுள்ளது. சிறிய இடைவெளியில் அனைத்துப் பக்கங்களும் ஆங்கிலத்திலும் வழங்கப்பட உள்ளன.

தள முகவரி:
www.kalgumalai.com அல்லது
www.kazhugumalai.co.in

பிற விபரங்கள்:
முந்தைய பதிவுகள்

கழுகுமலைக்கு வாரீங்களா? - 1
கழுகுமலைக்கு வாரீங்களா? - 2
கழுகுமலைக்கு வாரீங்களா? - 3

விக்கிப்பீடியாவில் கழுகுமலை:
ta.wikipedia.org/wiki/கழுகுமலை

விக்கிமேபியாவில் கழுகுமலை:
wikimapia.org/539217/

4 comments:

')) said...

ஜான்,

வலைதளத்துக்கு சென்று பார்த்தேன். மிக அருமையாக வடிவமைத்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள். சுற்றுலாவுக்கு உதவும் வகையில் அங்கே உள்ள தங்கும் வசதிகள், உணவகங்கள், அருகே உள்ள சுற்றுலாதளங்கள், டாக்சி ,ரயில் போன்ற பயண விவரங்களையும் வலைதளத்தில் ஏற்றினால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.

')) said...

//பயண விவரங்களையும் வலைதளத்தில் ஏற்றினால் நன்றாக இருக்கும் என தோன்றுகிறது.//

செல்வன், அது சம்பந்தமான தகவல்கள் திரட்டப்பட்டுள்ளது. எளிமைப்படுத்தி தரவேற்றம் செய்வது தான் பாக்கி. தங்கள் மேலான கருத்துக்கு நன்றி.

')) said...

பொஸ்கோ,
இணையத்தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி. அத் தளத்தில் உள்ள புகைப்படங்களைப் பார்த்து வியந்து போனேன். எமது முன்னோரின் சிற்பக்கலை கண்டு பேருவகை அடைந்தேன்.

')) said...

வெற்றி அவர்களே, வருகைக்கு நன்றி. தங்கள் வலைப்பக்கம் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.