இணையத் தமிழ்ச் சொல்லகராதி ?
தமிழில் எழுத வேண்டும் என ஆரம்பிக்கும் போது ஆங்கில வார்த்தைகளுக்கு நிகரான அல்லது சொல்ல நினைப்பதற்கு தகுந்த வார்த்தை வேண்டும் எனத் தேடும் போது சொல்லகராதி (Dictionary) மிகுந்த பயனளிக்கும். ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம் என்பதால் பல சமயங்களில் சில பொருள் அல்லது செயலுக்குரிய தமிழ் வார்த்தை தெரியாமலேயே இருக்கிறது. எழுதும் போது ஆங்கிலம் தவிர்த்து, அழகுத் தமிழில் எழுதலாம் என்றால் பல நேரங்களில் 'கையறு' நிலையாக இருக்கிறது. சொல்லகராதிக்கான ஏடு இருந்தால் பக்கம் பக்கமாக தேட வேண்டும். ஒரு பொருள்/விடயம் சார்ந்த அத்துணை ஒருங்கமைவுகளை பார்ப்பது என்பது இயலாத காரியம். தேடும் குறிச்சொல்லை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ (unicode Tamil) உள்ளீடு செய்து அதற்கான முடிவுகளை அறிய, சொல்லகராதிக்கு என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட இணையத் தளம் தமிழுக்கு என இல்லாதது வருத்தமளிக்கிறது. எனக்கு தெரிந்தவரை சில இணையத் தளங்கள் உள்ளன. அவை முழுவதும் விருப்பப்படுகின்ற/அவசியமான தரவுகளை தருவதாக இல்லை. உதாரணமாக நான் ஆங்கிலத்தில் இருந்து தமிழில் பொருள் அறிய இத்தளத்தினை பெரும்பாலும் உபயோகிப்பேன்.
http://www.lanka.info/dictionary/EnglishToSinhala.jsp
இது சிங்களத்திலும் தமிழிலும், ஆங்கிலத்தில் உள்ளீடு செய்த வார்த்தைகளுக்கு பொருள் காட்டும். மிகுந்த தரவுகள் இல்லாததும் பட வடிவில் (picture) இருப்பதும் பெருத்த குறை. இது தவிர, சென்னைப் பல்கலைக்கழகம் வழங்கும் சேவையையும் பயன்படுத்துகிறேன்.
http://dsal.uchicago.edu/dictionaries/tamil-lex/
இங்கு தமிழிலும் ஆங்கிலத்திலும் இருந்தாலும் தொழில் நுட்பம் சார்ந்தவைகளுக்கு உதவுவதாக இல்லை என்பது பயன்படுத்துபவர்களுக்கு தெரிந்திருக்கும். தொழில் நுட்பம் சார்ந்த கலைச்சொற்களுக்கு தமிழ் இணையப் பல்கலைக்கழகம் சொல்லகராதியைத் தனது இணையத்தளத்தில் உள்ளடக்கி வைத்திருக்கிறது. ஆனால் அது இயங்கும் விதமும், தமிழை உள்ளீடு செய்ய ஏற்படும் கடினத்தன்மையும் விரைவில் அத்தளத்தினை விட்டு வெளியேறத் தூண்டுகிறது. அத்தளத்தின் இணைப்பு இதுதான்.
http://www.tamilvu.org/coresite/html/cwintrodu.htm
இதனைப் படிக்கிற பல தமிழ் மொழி ஆர்வலர்கள், ஒருவேளை நல்ல தளம் அறிந்து பயன்படுத்தி வரலாம். கணினி வல்லுநர்களுக்கும், தமிழ் மொழி ஆர்வலர்களுக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்! சிறந்த இணையத்தளம் தமிழ்-ஆங்கிலம்-தமிழ் சொல்லகராதிக்கு இருப்பின் அறியத் தாருங்கள்.
ஜெர்மனியில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கின்ற நிலையில், ஜெர்மன் மொழியில் அறிவியில், மேலாண்மை, சமூகம் மற்றும் இதர பல மொழிப் பெயர்ப்புக்கும் சொற்கள் தேடுவதற்கும் நான் http://dict.leo.org/ பயன்படுத்தி வருகிறேன். அத்தளம் ஆங்கில ஜெர்மன் மொழிகளுக்கான சிறந்ததோர் இணையச் சொல்லகராதியாக இருக்கிறது. தமிழுக்காகவும் அத்தகையதோர் தளம் விரைவில் அமையும் என எதிர்பார்க்கிறேன். கணினி வல்லுநர்கள் நிறைந்திருக்கும் இவ்வாசகர் வட்டம் நிச்சயம் சிறந்தொரு பங்களிப்பை தமிழ் ஆர்வலர்களோடு இணைந்து விரைவில் நிறைவேற்றும். அந்நாளை தமிழ் மொழி வளர்ச்சிக்கான பொன் நாளாய் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். என்னாலும் இயன்ற பங்களிப்பை தரத் தயாராக இருக்கின்றேன்.


5 comments:
தேன்கூடு திரட்டியில் தமிழ் அகராதி என்று ஒரு இணைப்பு உள்ளது.
//தேன்கூடு திரட்டியில் தமிழ் அகராதி என்று ஒரு இணைப்பு உள்ளது.//
ஆமாம் பார்த்தேன் பாலராஜன்கீதா! நான் குறிப்பிட்டிருக்கிற சில தளங்களோடு மற்ற சில தளங்களும் இணைத்துக் கொடுத்து இருக்கிறார்கள். ஏறக்குறைய அனைத்தும் ஒரே விதத்தில் Digital Dictionary of South Asia இருந்து இயங்குவதாக உள்ளது.
தகவலுக்கு நன்றி!
உங்களின் பதிவிலிருந்து பல தகவல்களை அறிந்து கொண்டேன். மிக்க நன்றி.
//tamilvu: ஆனால் அது இயங்கும் விதமும், தமிழை உள்ளீடு செய்ய ஏற்படும் கடினத்தன்மையும் விரைவில் அத்தளத்தினை விட்டு வெளியேறத் தூண்டுகிறது. //
சரியே!
இந்த தளத்தில் பார்க்கவும்.
http://www.tamil.net/learn-tamil/tamildic.html
Post a Comment