கழுகுமலைக்கு வாரீங்களா?
வெளிநாடு, அழகான பெரிய பெரிய நகரங்கள், பூங்காக்கள், வேடிக்கை வினோதங்கள் என பலவற்றை ரசிப்பதற்கு எனப் பல இடங்கள் இருந்நாலும், நாம் பிறந்த ஊர் என்பது எல்லாவற்றையும் விட என்றுமே சிறப்பாகத் தான் தெரியும். ('காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு' என அல்ல). இருக்கட்டும்... அப்படி என்ன சிறப்பு சொந்த ஊருக்கு என எண்ணுங்கால், பல விசயங்கள் விடையாக வரும்.. பெற்றோர், பிள்ளைப் பருவம், பள்ளிக்கூட அனுபவங்கள், (சிலருக்கு முதல் காதல்..), எனப் பட்டியல் நீண்டு கொண்டு போகும். பிற்காலத்தில் வாழ்க்கையில் கிடைத்த பலவும் இவைகளுக்கு முன்னால் ஒரு தூசு தான். எனது சொந்த ஊரில் எனக்கு மேற்சொன்ன பலவும் எல்லாரையும் போல எனக்கும் பிடித்திருந்தாலும், அதையும் தாண்டி பல விசயங்கள் பிடிக்கும், எல்லோருக்கும் நிச்சயம் பிடிக்கும். எனவே தான் எனது சொந்த ஊரை, கழுகுமலை (கோவில்பட்டி வட்டம், தூத்துக்குடி மாவட்டம்), தமிழக அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது (எப்போவோ அறிவிக்க வேண்டியது... ஆனால் தாமதம்). காலத்தினால் அழியா கல்வெட்டுகள், சிற்பங்கள் தான் சிறப்பே! ஊர் பெயரிலேயே மலை (கழுகுமலை) இருக்கிறது. ஆம் மலைகள் நடுவே ஊர் அமைந்துள்ளது. கழுகாசலமூர்த்தி (முருகப்பெருமான்) திருக்கோவில் இருப்பதாலும் 'கழுகுமலை' என ஊர்ப் பெயர் வந்ததாகக் கூறுவர். மலையின் பாதி உயர அளவில் சிற்பங்கள் உள்ளன. இங்கு கி.பி 8 - 9 ஆம் நூற்றாண்டு காலத்திய ஜைன உருவங்கள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இவை மூன்று வரிசைகளாக செதுக்கப்பட்டுள்ளன. (பார்க்க படம்). இதனோடு மகாவீரர், மற்றும் பல சிற்பங்களும் செதுக்கப்பட்டுள்ளன. முற்காலத்தில் ஜைன வகுப்புகள் அவ்விடத்தில் நடத்தப்பட்டுள்ளன.


பழையன கழிதலும், புதியன புகுதலும் இருக்கும்போது ஆர்வம் கொஞ்சம் வரும் தானே!!
இந்த இணையப்பக்கத்தில் இணைய இணைப்புகளில் பல புதிய இணைப்புகளைப் புதிதாகச் சேர்த்து இருக்கிறேன்.
பொங்குதமிழ் வரையிலான இணைப்புகள் யாவும் வலைப்பூக்கள் சம்பந்தப்பட்டவை. இந்த இணைப்புகளுக்குள் சென்றாலே மற்றைய அனைத்து
இணைப்புகள் பற்றியும் பஞ்சமில்லாமல் கிடைக்கும்.
பொங்குதமிழ் convertor என்ற இணைப்பு உங்களுக்கு பலவகையான தமிழ் எழுத்துருக்களை 
உங்களுக்காக ஒரு செய்தி...
தமிழ் நேயர்களுக்கு புத்தாண்டு பரிசாக, 2003-ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 28-ம் நாளன்று சீன வானொலி தமிழ் ஒலிபரப்பினை இணையதளத்தில், நமது தமிழ் நிகழ்ச்சிகளை துவக்கியுள்ளது. 1998-ம் ஆண்டிலிருந்து அந்நிய மொழிகளில் இணைய தளத்தை பயன்படுத்த துவங்கியது. சீனர்கள் நமது தமிழ் மொழியின் மீது பற்றுக்கொண்டு, 1963-ம் ஆண்டு வானொலி மூலம் தமிழ் ஒலிபரப்பை துவக்கி இன்று வரை பல்லாயிரக்கணக்கான நேயர்களை தன் வசம் வைத்திருக்கிறது.

