வலைப்பூ பதிபவர் கவனத்திற்கு...
தற்செயலாக எனது வலைப்பூவிற்கு வந்தவர்கள் அட்டவணையை பார்த்தபோது, யாரோ ஒருவர் http://indibloggers.blogspot.com இல் இருந்து வந்திருப்பது தெரிய வந்தது. அது என்ன பக்கம் எனப் பார்த்த போது, இந்திய நண்பர்களுக்குரிய வலைப்பூக்களின் விபரக்கோவை என அறிந்தேன். இது தான் IndiBloggers - Index of Indian Bloggers. ஏற்கனவே தமிழ் வலைப்பூ பதிவாளர்களைத் தொகுக்க ஒரு வலைப்பூ ஏற்கனவே இருக்கிறது. தென்னவனின் IndiBloggers விபரக்கோவை போலவே இன்னும் பல விபரக்கோவைகள் இருக்கிறது. சில நேரங்களில் புதிதாக தேடி வருபவர்கள் எளிதில் உங்கள் வலைப்பூவை கண்டுகொள்ள இது போன்ற வலைப்பூ விபரக்கோவை வசதியாக இருக்கும்.
நண்பர்களோடு மின்னஞ்சலில் பகிர்ந்து கொள்ளும் சுவையான தகவல்களோடு ஆரம்பிக்கிறேன். நேரம் வாய்க்கும் போது அப்பக்கம் சென்று வாருங்கள், ஆமா முகவரி இல்லாமல் எப்படி வருவீர்கள்? இந்தாங்க முகவரி:
ரோமன் கத்தோலிக்க மதத் தலைவராக அதிக வருடங்கள் இருந்தவர். உலகத்தின் அனைத்து தரப்பினரையும் அன்பால் கவர்ந்தவர். அவரது மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. பல புரட்சிகரமான சிந்தனைகளை விட்டுச் சென்றவர். இளைஞர்களின் பலம் அறிந்தவர். குழந்தைகளோடு அளவற்ற அன்பு கொண்டவர். அநீதிக்கு எதிராக முகம் பாராது எதிர்ப்பு தெரிவித்தவர். கடந்த காலத்தில் தனது சொந்த மதம் அடுத்தவர்களுக்கு எதிராக செய்த கொடுமைகளுக்குக்கூட வருத்தம் தெரிவித்து, மன்னிப்புக் கேட்டவர். அப்படிப்பட்ட உன்னத மனிதரின் மறைவிற்காய் கிறித்தவர்கள் மட்டுமல்ல உலகமே கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
