Wednesday, November 30, 2005
அக்கினிச் சிறகுகளில் சில...
விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் ஈடுப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம், நமது குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் எழுதிய "அக்னிச் சிறகுகள்". இப்புத்தகத்தை பலமுறை படித்து இருக்கிறேன். அதில் விஞ்ஞானம் பற்றி அவர் குறிப்பிட்டுள்ள வாக்கியம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.
- விஞ்ஞானம் , ஒரு தணியாத தாகம்; சாத்தியங்களையும், உறுதியான விளைவுகளையும் தேடப்போகும் ஒரு முடிவில்லாத பயணம்.
- முதலாவதாக உங்களுடைய கல்வியையும், திறமைகளையும் வலுப்படுத்திக் கொள்ளுங்கள். அறிவாற்றல் தான் நிதர்சனமான, நிலையான சொத்து. உங்கள் வேலையில் பயன்படும் மிக முக்கியமான சாதனமும் இதுதான். எந்த அளவுக்கு உங்களுடைய அறிவுத் திறனால் இப்போதைய நிலவரம் வரை தெரிந்து வைத்திருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் சுதந்திரமான மனிதர்.
Posted by
John ஜான் போஸ்கோ
at
12:03 AM
0
comments
Subscribe to:
Posts (Atom)

