Saturday, June 17, 2006

இருமனம் கூடும் திருமண யதார்த்தம் இதுவா?


Love திருமணத்திற்கு பிறகு கணவனும், மனைவியும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதில்லை. இருப்பினும் இணைந்தே இருப்பர். - ஹேமண்ட் ஜோஷி

Loveதிருமணம் என்பது பொருள் பொதிந்தது. நல்ல மனைவி அமைந்தால் நீ மகிழ்ச்சியாய் இருப்பாய். முரண்பாடுள்ள மனைவி அமைந்தால் நீ தத்துவ ஞானியாகி விடுவாய். - சாக்ரடீஸ்

Loveஇதுவரை என்னால் விடையளிக்க முடியாத மிகப் பெரியதோர் வினா இது: 'பெண்கள் எதை விரும்புகிறார்கள்?'- சிக்மன் பிராய்டு

Loveநான் எனது மனைவியோடு சில வார்த்தைகள் உபயோகித்தால், அவள் ஒரு கட்டுரையே பதிலாகத் தருகிறாள் - யாரோ

Loveமின்னணு வங்கியை விட மிக விரைவாக பணத்தை அனுப்புவதற்கு ஒரு வழி இருக்கிறது. அது தாங்க திருமணம்! - ஜேம்ஸ் ஹோல்ட் மெக்காவ்ரன்

Loveஉங்கள் இல்லற வாழ்க்கை திருப்திகரமாக இருக்க இரு ரகசியங்கள். 1. நீங்க தவறு செய்யும் போது ஏற்றுக் கொள்ளுங்கள். 2. சரியாக இருக்கும் பட்சத்தில் அமைதியாய் இருங்கள். - நாஸ்

Loveஉங்க இல்லாளின் பிறந்த நாளை வாழ்நாள் முழுவதும் ஞாபகத்தில் வைக்க வேண்டுமா? ஒரே ஒரு முறை மறந்து தான் பாருங்களேன். -யாரோ

Loveநானும் எனது மனைவியும் இருபது ஆண்டுகள் மகிழ்ச்சியாக இருந்தோம். அதன் பின் இருவரும் சந்தித்தோம். - ரோட்னி டேங்கர்பீல்டு

Loveநல்ல மனையாள் எப்போதும் தனது துணைவரை மன்னித்து விடுவாள, தான் தவறு செய்யும் போதெல்லாம்! - மில்டன் பெர்லே

Loveபகையாளியோடு கூட தூங்கும் ஒரே ஒரு போர், திருமணம் மட்டுமே! - யாரோ

Loveஒருவர்: (பெருமையாக)"எனது மனைவி தேவதை" மற்றொருவர்: "நீ கொடுத்து வைத்தவன், என்னவள் இன்னும் தேவதையாகவில்ல (உலகில் தான் இருக்கிறாள்)"

பின்குறிப்பு: எனதருமை தாய்குலங்களே! இதில் எனது கருத்துக்கள் எதுவும் இல்ல. பல அறிஞர்கள் சொன்னதை தொகுத்து கொடுத்திருக்கிறேன். அவ்வளவுதாங்க..